போலீஸ் வீட்டில் வேலைக்காரியின் கள்ளக்காதல்; அசிங்கமாக பேசி மிதித்த காவல் ஆய்வாளர் சபீதா!

தூத்துக்குடியில் அசிங்கமாக பேசி மிதித்த காவல் ஆய்வாளர் சபீதாவை போலீஸ் டி.ஐ.ஜி பிரவீன் அதிரடியாக இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.

எதற்கு இந்த இடமாற்றம் என்ன நடந்தது வாங்க பாக்கலாம், தூத்துக்குடி மாதவன் நகரை சார்ந்தவர் சபீதா.இவர் சிபிசிஐடி காவலில் ஆய்வாளராக இருந்து வருகின்றார். இவர் வீட்டில் வீட்டு வேலை செய்து வருபவர் மாரியம்மாள்.இவர் ஆய்வாளரின் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த போது காதலனுடன் கள்ள உறவில் ஈடுபட்டார்.

தூத்துக்குடியில் பெண் காவல் ஆய்வாளர் வீட்டிற்குள் புகுந்து வேலைக்கார பெண்ணுடன் காதல் லீலைகளில் ஈடுபட்டு வந்த இளைஞருக்கு தர்ம அடி கொடுத்துள்ளார் காவல் ஆய்வாளர் சபீதா. விசுவாசமில்லா வேலைக்காரி போலீஸ் வீட்டில் செய்த லீலைகள் சிசிடிவி காட்சி மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆனால் வேலைக்கார பெண்மணி தனது சகோதரர் சங்கரை காவல் ஆய்வாளர் சபீதா தாக்கியதாக கூறி வீடியோ ஒன்றையும் வெளியிட்டார்.

இதன் பின்னணி குறித்து காவல் ஆய்வாளர் சபீதாவிடம் விசாரித்த போது அவர் இல்லாத நேரத்தில் வீட்டில் வேலைக்காரி பார்த்துவந்த விபரீத வேலை வெளிச்சத்திற்கு வந்தது. கடந்த 7ந்தேதி காவல் ஆய்வாளர் சபீதா அவரது கணவர் ஆகியோர் வேலைக்கு சென்றுவிட , இரு குழந்தைகளும் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து மீண்டும் டியூசனுக்கு சென்றுள்ளனர். அதன் பின்னர் ஒரு மார்க்கமான வேலைக்காரியாகி உள்ளார் மாரியம்மாள்..!

சிசிடிவி மானிடரை ஆப் செய்துள்ளார். சிசிடிவி மானிட்டரை சுவிட்ச் ஆப் செய்தாலும் கேமராவில் காட்சிகள் பதிவாகும் என்பது மாரியம்மாளின் புத்திக்கு எட்டவில்லை, அங்கு நடந்த அசிங்கங்கள் எல்லாம் சிசிடிவியில் பதிவாகிவிட்டது.

சிறிது நேரத்தில் இரு சக்கரவாகனத்தில் தலையில் ஹெல்மெட்டுடன் முரட்டு ஆள் ஒருவன் வேலைக்காரியை தேடி வீட்டுக்கு வருகிறான். அவனை அழைத்துக் கொண்டு வீட்டின் படுக்கை அறைக்கு சென்றுவிட்டாள்.

ஆனால் காவல் ஆய்வாளர் சபிதாவின் மகன் புத்தகத்தை எடுக்க வீட்டுக்கு திரும்பியுள்ளார், திருடனுக்கு தேள் கொட்டியது போல மிரண்டு போன வேலைக்காரி, அவனை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளார்.

அதற்குள்ளாக வீட்டுக்குள் இருந்த முரட்டு ஆள் சமையலறைக்குள் சென்று பதுங்கிக் கொண்டுள்ளார். அந்த சிறுவன் சென்றதும் இவர்களது லீலைகள் தொடர்ந்துள்ளது .

புத்தகம் எடுக்கச் சென்ற சிறுவன், வீட்டு வாசலில் கழற்றிப் போடப்பட்டிருந்த காலணியை வைத்து, வீட்டிற்குள் வேறு யாரோ இருக்கின்றனர் என்பதைக் கண்டுபிடித்து தனது பெற்றோரிடம் போட்டு கொடுக்க, சிசிடிவியை போட்டுப்பார்த்த ஆய்வாளர் சபீதா அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதேபோன்று பல நாட்கள் அசிங்கங்கள் நடந்திருப்பதை அறிந்த காவல் ஆய்வாளர் வேலைக்காரியை விசாரித்துள்ளார், அப்போது வீட்டிற்கு வந்து சென்றவர் சங்கர் என்றும் அவருடன் சேர்ந்து வீட்டில் இருந்து நகை-பணம் திருடியதும் தெரியவந்துள்ளது.

போலீசில் வேலைக்காரி மீது புகார் அளிப்பட்டதை தெரிந்து கொண்ட வேலைக்காரியின் காதலன் சங்கர், பஞ்சாயத்து பேச, தனது ஆதரவாளர்களுடன் காவல் ஆய்வாளர் வீட்டிற்கு சென்றுள்ளான். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் சங்கரை இழுத்து பிடித்து ஏறி மிதித்த காவல் ஆய்வாளர் சபீதா, அவர்களுக்கு தர்ம அடி கொடுத்து விரட்டி உள்ளார்.



Comments are closed.

https://newstamil.in/