விஜய் , ரஜினி பட பைனான்சியர் வீட்டில் 65 கோடி கட்டு கட்டாக பணம்

நடிகர் விஜய், ஏ.ஜி.எஸ் சினிமாஸ், சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் உள்ளிட்டோரது வீடு மற்றும் அலுவலகங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் தொடர் சோதனை நடத்தினர்.

இந்நிலையில் நேற்று ஏஜிஎஸ் மற்றும் விஜய் வீட்டில் வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்தினர். இதில் ஏஜிஎஸ் நிறுவனத்திடம் இருந்து சுமார் ரூ 25 கோடி வரை சிக்கியதாக கூறப்பட்டது.

தற்போது ரஜினி, விஜய்யின் பட பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் 65 கோடி மூட்டை மூட்டையாக பணம் சிக்கியுள்ளதாக எ என் ஐ புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இவர் தான் பிகில், தர்பார் படத்தின் விநியோகஸ்தர்களுக்கு பைனான்ஸ் செய்ததாக கூறப்பட்டது.

தர்பார் படத்தின் விநியோகஸ்தர்களுக்கு பைனான்ஸ் வழங்கி நஷ்டகணக்கு காட்டியதால் வருமான வரிச்சோதனையில் சிக்கியதாக வெளியான தகவலின் பின்னணி தான் இந்த ரெய்டு என்று கூறப்படுகிறது.

அது மட்டுமின்றி தமிழ் சினிமாவில் பாதி படங்களுக்கு இவர் தான் பைனான்ஸியர் என்பது குறிப்பிடத்தக்கது. இதை பார்த்த ரசிகர்கள் அனைவருக்கும் கடும் அதிர்ச்சி தான், மேலும், அந்த செய்தி இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

இதை தொடர்ந்து இதனால் விஜய்க்கு ஏதும் பிரச்சனை வருமா என்று பலரும் இணையத்தில் பேசி வருகின்றனர். தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாகவும் வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.



Comments are closed.

https://newstamil.in/