ஐடி ஊழியர்கள் ஜூலை 31 வரை வீட்டிலிருந்து பணியாற்றலாம்

ஜூலை 31 வரை ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் நடைமுறை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் 185 நாடுகளிலும் பிராந்தியங்களிலும் பரவியுள்ளது. இன்று இந்தியாவின் நாடு தழுவிய ஊரடங்கு முப்பத்தைந்தாவது நாள், இது மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்று முதலமைச்சர்களுடனான உரையாடலின் போது, பிரதமர் மோடி ஹாட்ஸ்பாட்களில் கட்டுப்பாடுகள் தொடரக்கூடும் என்று சுட்டிக்காட்டியதாக கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவலிலிருந்து பாதுகாப்பதற்கும், சமூக விலகலை உறுதி செய்யவும், அனைத்து ஐ.டி நிறுவனங்களின் ஊழியர்களும், ஏப்.,30ம் தேதி வரை, வீட்டிலிருந்து பணியாற்ற மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.

இந்நிலையில், இந்த நடைமுறையை ஜூலை 31 வரை நீட்டிப்பதாக, மத்திய தகவல் தொழில்நுட்ப மற்றும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்தார்.



Comments are closed.

https://newstamil.in/