கட்சி தொடங்க ரஜினிகாந்த் அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல்!

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் அரசியல் வருகை குறித்து ஆலோசனையில் ஈடுபட்ட நடிகர் ரஜினி, ‛அரசியல் கட்சி துவங்குவது குறித்து நான் விரைந்து முடிவெடுக்கிறேன்; அதுவரை பொறுத்திருங்கள்,’ என தெரிவித்ததார்.

ராகவேந்திர மண்டபத்தில் மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களிடம் ஆலோசனை நடத்திவரும் ரஜினிகாந்த், கட்சி தொடங்கலாமா எனக் கேட்டதாகவும், கட்சி தொடங்கினால் வெற்றி வாய்ப்பு உள்ளது என செயலாளர்கள் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ‛தேர்தலுக்கு முன் கட்சி தொடங்கலாமா? தனித்து போட்டியிடலாமா அல்லது கூட்டணியுடனா? மக்கள் மன்றத்தின் செயல்பாடுகளை பொதுமக்கள் எப்படி பார்க்கின்றனர்? கட்சி தொடங்கினால் மக்களின் வரவேற்பு எப்படி இருக்கும்? கொரோனா பரவலுக்கு இடையே பரப்புரை செய்வது எப்படி? போன்ற கேள்விகளை நிர்வாகிகளிடம் முன்வைத்ததாக கூறப்படுகிறது.

எனினும், கட்சி தொடங்குவதற்கான பணிகள் எதுவும் நடைபெறவில்லை. கொரோனா பரவல் காரணமாக கட்சி தொடங்கும் திட்டத்தை ஒத்தி வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. எனினும், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி உரிய நேரத்தில் முடிவெடுக்க உள்ளதாக ரஜினிகாந்த் விளக்கம் அளித்திருந்தார்.

இதற்கு நிர்வாகிகள் ஒவ்வொருவராக அரசியல் குறித்து கருத்துகளை கூறிவந்தனர். தொகுதி வாரியாக பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதை நிர்வாகிகள் எடுத்துரைத்தனர். மேலும், ரஜினி உடனடியாக கட்சியை தொடங்க வேண்டும் என மக்களிடையே எழுச்சி ஏற்பட்டுள்ளதாகவும், முதல்வர் வேட்பாளராக ரஜினியே இருக்க வேண்டும் எனவும் மன்ற நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கு ரஜினி, ‛இன்னும் அதிகமாக உழைத்தால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும். அரசியல் கட்சி துவங்குவது குறித்து நான் முடிவெடுக்கிறேன்; அதுவரை பொறுத்திருங்கள்,’ என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து வரும் ஜனவரியில் ரஜினி கட்சியை தொடங்குவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.

ராகவேந்திரா மண்டபத்தில் மாவட்ட செயலாளர்கள் சந்திப்பு நடைபெற்று போயஸ் கார்டனுக்கு புறப்பட்டுச் சென்றபிறகு, அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”நிர்வாகிகளின் கருத்துக்களை என்னிடம் கூறினார்கள். நானும் எனது கருத்தை பகிர்ந்து கொண்டேன். நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் உங்கள் உடன் இருப்போம் என அவர்கள் கூறினர். நான் எனது முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் தெரிவிக்கி்றேன்” என்று தெரிவித்துள்ளார்.



Comments are closed.

https://newstamil.in/