ரஜினிகாந்த் 168 – இமான் துள்ளல் இசையில் ‘அண்ணாத்த’ மோஷன் போஸ்டர்
தர்பார் படத்தை அடுத்து சிவா இயக்கத்தில் ரஜினிகாந்தின் 168-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உட்பட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வளர்ந்து வருகிறது, படத்துக்கும் டி.இமான் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ‘அண்ணாத்த என தற்போது பெயரிட்டு, படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
இந்தப் படத்தில் நயன்தாரா வழக்கறிஞர் கதாபாத்திரத்திலும், ரஜினிகாந்துக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது
இளையராஜாவின் ஆசை நூறு வகை பாடலை போன்று துள்ளலாக உள்ளது இமானின் இந்த பிஜிஎம். அதோடு அண்ணாத்த அண்ணாத்த என கோரஸும் இடம் பெற்றிருக்கிறது.
இந்நிலையில் முதல் மூன்று இடங்களிலும் ரஜினியின் அண்ணாத்த படத்தின் ஹேஷ்டேக்கே ட்ரென்ட்டிங்கில் உள்ளது.