விஜய்யின் பிகில் படம் வசூலில் சாதனை
இந்த ஆண்டில் உலக அளவில் அதிகம் வசூல் செய்த தமிழ்ப் படம் பிகில் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறியுள்ளார்.
அட்லீ-விஜய் கூட்டணியில் இந்த வருட தீபாவளிக்கு வெளியான படம் தான் பிகில். இப்படம் வெளியாகி இன்றோடு 50வது நாளை எட்டிவிட்டது.
இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பில் இருந்தே ரசிகர்கள் 50வது நாள் கொண்டாட்ட பிளான்களை போட ஆரம்பித்துவிட்டனர்.
படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் வசூலைக் குவித்திருப்பதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் படத்தைத் தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் படத்தின் வசூல் குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இந்த நிலையில் இப்பட தயாரிப்பாளர் அர்ச்சனா 50வது நாளுக்கு வெற்றியடைய வைத்து ரசிகர்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
இந்த வருடத்தில் உலகம் முழுவதும் அதிகம் வசூலித்த தமிழ் படங்களில் விஜய்யின் பிகில் முதல் இடம் பிடித்துள்ளது, இதற்கு நன்றி என பதிவு செய்துள்ளார்.