தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கொரோனா தொற்று காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், 68 வயது. ஏற்கனவே உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், பெரிய அளவில் கட்சி பணிகளில் கவனம் செலுத்தாமல், வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், அவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதை தொடர்ந்து, சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள, தனியார் மருத்துவமனையில், கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.
பரிசோதனையில், தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், நலமுடன் இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
This site really has all the information I wanted about this subject and didn’t know who to ask.