விஜயின் அரசியல் சந்திப்பு – விஜயை கைபிடித்து வரவேற்ற ஸ்டாலின்!

தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பதவியேற்ற பிறகு, மாநில அரசியலில் பல எதிர்பாராத மாற்றங்கள் தொடர்ந்து நடந்துவருகின்றன. அரசியல் விமர்சகர்கள் கூட கணிக்காத வகையில் அவர் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது இன்னும் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக உள்ளது.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்ததும், தலைமைச் செயலகத்திலிருந்து நேராக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினின் இல்லத்திற்கு விஜய் சென்றார்.

வீட்டு வாசலிலேயே எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், விஜயை புன்னகையுடன் வரவேற்றார். இருவரும் அன்பாக கட்டியணைத்து வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். பின்னர் வீட்டுக்குள் சென்ற விஜயை, ஸ்டாலினும் கட்டியணைத்து வரவேற்று, கைபிடித்தபடி ஹாலுக்கு அழைத்துச் சென்றார்.

அதன்பின் விஜய், ஸ்டாலினுக்கு பூங்கொத்து வழங்கி சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதற்கு பதிலாக ஸ்டாலினும் சால்வை அணிவித்து முதலமைச்சராக பொறுப்பேற்றதற்கான வாழ்த்துகளை தெரிவித்தார். தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின், “காலத்தின் நிறம் கருப்பு, சிவப்பு” என்ற திமுக வெளியீட்டு புத்தகத்தை விஜய்க்கு பரிசாக வழங்கினார்.

சில நிமிடங்கள் மூவரும் அமர்ந்து அரசியல் மற்றும் தற்போதைய சூழல்கள் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. பின்னர் விஜய் அங்கிருந்து புறப்பட்டார்.

இதையடுத்து, சென்னை அண்ணா நகரில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் இல்லத்திற்கும் விஜய் சென்றார். அங்கு துரை வைகோ, வீட்டின் வாசலிலேயே அவரை கட்டியணைத்து வரவேற்றார். பின்னர் வைகோவும் விஜயை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

அந்த நேரத்தில் வைகோ குடும்பத்தினர், மதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏக்கள் பலரும் முதலமைச்சர் விஜயுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து வைகோ மற்றும் விஜய் சிறிது நேரம் தனிப்பட்ட முறையில் உரையாடினர்.

பின்னர் இருவரும் ஒன்றாக வெளியே வந்து, அங்கு கூடியிருந்த மக்களை நோக்கி கைஅசைத்து வாழ்த்துகளை தெரிவித்தனர். வைகோ, விஜயை கார்வரை வந்து வழியனுப்பி வைத்தார்.

தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களை தொடர்ந்து சந்தித்து வரும் முதலமைச்சர் விஜய், அடுத்ததாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பாமக தலைவர் அன்புமணியையும் நேரில் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



Sudhakar

சுதாகர் - தமிழ் செய்தித்தளம் Newstamil.in இணையதளத்தில் திறமையான எழுத்தாளர் மற்றும் எடிட்டர். தமிழ் வாசகர்களுக்காக அரசியல் (Politics), உலகச் செய்திகள் (World), தமிழ்நாடு (Tamil Nadu), தேசிய செய்திகள், நீதிமன்றம் (Court), டெக்னாலஜி, ஆட்டோமொபைல், நடப்பு நிகழ்வுகள் மற்றும் விளையாட்டு போன்ற பிரிவுகளில் ஆழ்ந்த, துல்லியமான மற்றும் விரைவான செய்திகளை எழுதும் திறன் கொண்டவர். கிரிக்கெட் தொடர்பான செய்திகளை சுவாரஸ்யமாகவும், வாசகர்களை ஈர்க்கும் விதமாகவும் வழங்கும் திறமை அவரின் முக்கியமான பலமாகும். தகவல்களை எளிதில் புரியும் வகையில், நேர்மையான அணுகுமுறையுடன் வழங்குவதால் Newstamil.in வாசகர்களிடையே நம்பகமான எழுத்தாளராக திகழ்கிறார்.

https://newstamil.in/