டிரம்ப் வியந்த பாலிவுட் சினிமா, சச்சின், கோஹ்லி

டிரம்ப் தனது இரண்டு நாள் இந்தியா பயணத்தின் முதல் கட்டமாக அகமதாபாத் வந்துள்ளார். முன்னதாக, அரங்கத்தில் இருந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார் ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்வின் போது அகமதாபாத்தின் மொட்டெரா ஸ்டேடியத்தில் கூட்டத்தில் உரையாற்றியபோது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் DDLJ (தில்வாலே துல்ஹானியா ல ஜெயங்கே), ஷோலே, சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோஹ்லி ஆகியோரை குறிப்பிட்டுள்ளார்.

அப்போது பேசிய அவர், ‘சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா உருவாகியுள்ளது. விரைவில், உலகின் மிகப் பெரிய நடுத்தரவர்க்கத்தினரின் இல்லமாக மாறும். இந்தியா கற்பனைத் திறனின் தலைமையிடமாக திகழ்கிறது.

ஆண்டுக்கு 2,000 பாலிவுட் திரைப்படங்கள் உருவாகின்றன. பங்க்ரா, DDLJ, சோலே உள்ளிட்ட படங்கள் உலகம் முழுவதும் வாழும் மக்களின் விருப்பமான படமாக இருக்கின்றன. நீங்கள் உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களாக சச்சின் டெண்டுல்கர், விராட் கோஹ்லி ஆகியோரை உற்சாகப்படுத்துகிறீர்கள்’ என்று தெரிவித்தார்.



Comments are closed.

https://newstamil.in/