பாஜகவின் சாம்ராஜ்யம் சரிவு; பலம் இழக்கும் மோடி அலை!

ஜார்கண்ட் சட்டப்பேரவை தோல்வியை தொடர்ந்து பாஜகவின் சாம்ராஜ்யம் ஒட்டுமொத்தமாக சரிய தொடங்கியுள்ளது.

2014ல் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த நிலையில் குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், கோவா மற்றும் அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களிலும் பாஜகவின் ஆதிக்கமே இருந்தது. ஆனால், அதுவே அடுத்த மூன்று ஆண்டுகளில் சுமார் 21 மாநிலங்களை பா.ஜ.க கைப்பற்றியது. நாடு முழுவதும் வீசிய மோடி அலையே இதற்குக் காரணமாகக் கூறப்பட்டது.

இதனையடுத்து, 2018-ம் ஆண்டு தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநில தேர்தலில் பாஜகவின் செல்வாக்கு தவிடுபோடியானது.

பாஜகவின் கோட்டையாக இருந்த மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களை காங்கிரஸ் கைப்பற்றியது. மிசோரம், தெலங்கானா போன்றவை மாநிலக் கட்சிகளிடம் சென்றது. ஆந்திராவில், கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் சிறப்பு அந்தஸ்து வழங்காததால் பாஜகவைவிட்டு வெளியேறியது.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மிசோரம், பஞ்சாப், ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பாஜகவால் ஆட்சியமைக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதேபோல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ளது. தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் சிவசேனா அமைத்துள்ளது.

தற்போது நடைபெற்று முடிந்த தேர்தலில் காங்கிரஸ் காங்கிரஸ்-ஜே.எம்.எம்.-ஆர்.ஜே.டி கூட்டணி, பெரும்பான்மைக்கு தேவையானதை விட கூடுதல் இடங்களில் முன்னிலை பெற்று ஆட்சியமைக்க உள்ளது. தற்போது நிலவரப்படி, பாஜக கூட்டணி ஆளும் மாநிலங்கள் எண்ணிக்கை 16-ஆக குறைந்துள்ளது.



Comments are closed.

https://newstamil.in/