What is Monkey B virus? – குரங்கு B வைரஸ் தொற்று அறிகுறிகள்

சீனாவில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த கால்நடை மருத்துவரின் மரணத்துக்கு ‘Monkey B’ என்ற வைரஸ் காரணம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகம் கொரோனாவை (Corona Virus) ஒழிக்க போராடிக் கொண்டிருக்கும் நிலையில், சீனா, அடுத்த வைரஸை உலகிற்கு அனுப்ப தயாராகி விட்டது. சீனாவில் ‘குரங்கு பி’ (Monkey B Virus) வைரஸ் தாக்கி ஒருவர் பலியான செய்தி உலகில் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. இந்த வைரஸ் நோயில் இறப்பு விகிதம் அதிகம் என்பது மேலும் கவலை அளிக்கும் விஷயம் ஆகும்.

குரங்கு பி.வி வகை வைரஸ் மக்காக்ஸ் ( macaques) என்னும் வகை குரங்குகளில் இயற்கையாகவே காணப்படுகிற்து . இந்த வைரஸ் மக்காக்ஸ் வகை குரங்குகள் மூலம் பரவுகிறது, சிம்பன்சிகள் மற்றும் கபுச்சின் குரங்குகள் மூலமும் இந்த வரஸ் பரவலாம். பி வைரஸ் பொதுவாக ஹெர்பெஸ் பி (herpes B), குரங்கு பி வைரஸ், ஹெர்பெஸ்வைரஸ் சிமியா (herpesvirus simiae) மற்றும் ஹெர்பெஸ்வைரஸ் பி (herpesvirus B) என்றும் குறிப்பிடப்படுகிறது.

அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் இது குறித்து கூறுகையில், பி வைரஸ் நோய்த்தொற்றுகள் அரிதானவை என்றும், 1932 ஆம் ஆண்டில் முதன்முதலில் கண்டறியப்பட்டதிலிருந்து, வெறும் 50 பேரை மட்டுமே பாதித்துள்ளது என்றும் கூறியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் 21 பேர் மட்டுமே இறந்தனர் எனவும் கூறப்படுகிறது.

சீன அறுவை சிகிச்சை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மனித பரவல் குறித்து இதுவரை எந்த அறிக்கையும் வரவில்லை. அவருடன் தொடர்பு கொண்டவர்களுக்கு தொற்று ஏற்ப்ட்டதாக இது வரை கண்டறியப்படவில்லை. 1932ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட போது, பாதிக்கப்பட்ட 50 பேருக்கும், குரங்குகள் கடித்ததால், கீறியதால் ஏற்பட்டதாக பதிவாகியுள்ளது.

இந்த வைரஸ் குரங்கின் உமிழ்நீர், மலம், சிறுநீர், மூளை அல்லது மாகேக்கின் முதுகெலும்பு திசுக்களில் காணப்படுகிறது. பொதுமக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்படுவதற்கான ஆபத்து குறைவாக இருந்தாலும், கால்நடை தொடர்பான ஆய்வகத் பணியாளர்கள், கால்நடை மருத்துவர்கள், குறிப்பாக குரங்குகளுக்கு சிகிச்சை அளிப்பவர்களுக்கு ஆபத்து அதிகம் உள்ளது.


80 thoughts on “What is Monkey B virus? – குரங்கு B வைரஸ் தொற்று அறிகுறிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/