ஜிப்ஸி படத்திற்கு கிடைத்த முதல் விமர்சனம் – வீடியோ
ஜோக்கர் படத்தை அடுத்து ராஜூ முருகன் இயக்கத்தில் ஜீவா நடித்து வெளிவர காத்திருக்கும் படம் ஜிப்ஸி. அவருக்கு ஜோடியாக நடாஷா சிங் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இந்தப் படத்தை ஒலிம்பியா மூவிஸ் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து தணிக்கைக்குச் சென்றபோது படத்தின் பல்வேறு காட்சிகள் நீக்கப்பட்டன. இதையடுத்து இந்தப் படத்துக்கு ‘A’ சான்றிதழ் வழங்கியது தணிக்கைக் குழு.
சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் டீசரும் சரி இன்று வெளிவந்த இப்படத்தின் 2 நிமிட காட்சியும் சரி சர்ச்சைக்கு உட்பட்டதாக தான் இருக்கிறது என்று பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைதங்களில் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளோடு நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரிவியூ தியேட்டரில் பார்த்து ரசித்துள்ளார். படத்தை பார்த்துவிட்டு இவர் கூறியது ” சரியான நேரத்தில் சரியான ஒரு படம்” என்று படக்குழுவைப் பாராட்டியுள்ளார்.