தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு?
வெளிநாடுகளில் இருந்து சென்னை மற்றும் திருச்சிக்கு வந்த பயணிகள் இரண்டு பேர் கொரோனா தொற்று சோதனைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏமனிலிருந்து இந்தியாவுக்கு திரும்பிய தமிழருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இவருக்கு சென்னை அரசு ராஜிவ் மருத்துவமனையில் தனி அறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கரோனா பல்வேறு நாடுகளில் தீவிரமாக பரவி வரும் நிலையில் விமான நிலையம் வந்திறங்கும் பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக சிங்கப்பூரில் வந்த பயணி ஒருவருக்கும், ஓமனில் இருந்து வந்த ஒருவருக்கும் காய்ச்சல் அறிகுறிகள் இருந்ததால் அவர்கள் முறையே திருச்சி மற்றும் சென்னை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்
இதுவரை வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் 1077 பேர், மாநிலம் முழுவதும் அவர்களின் வீடுகளிலேயே வைத்து கண்காணிக்கப்படுகின்றனர்.
புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 3 பேரின் உடல் நிலையும் சீராக உள்ளதாக மத்திய காதாரத்துறை சிறப்புச் செயலர் சஞ்சீவ் குமார் தெரிவித்துள்ளார்.