D40 தனுஷ் படத்தின் மோஷன் போஸ்டர் – ஃபர்ஸ்ட் லுக் தேதி அறிவிப்பு!
பேட்ட படத்தை அடுத்து தனுஷின் 40-வது படத்தை இயக்கி வருகிறார் கார்த்தி சுப்புராஜ். தனுஷ்-கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகிவரும் D40 படத்தின் ஷூட்டிங் இன்று முழுமையாக முடிவடைந்துள்ளது. கதைக்களம் லண்டனில் நடைபெறுவது போல இருப்பதால் படத்தின் பெரும்பாலான பகுதி சூட்டிங் லண்டனில் தான் நடைபெற்றது.
கடைசி நாள் ஷூட்டிங் இன்று என இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் ட்விட்டரில் கூறியுள்ளார். மேலும் D40 பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளிவரும் என அறிவித்துள்ளார் அவர்.
இந்நிலையில் தற்போது ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வரும் 19-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதற்கான அறிவிப்புடன் வெளியான போஸ்டரில் அரிவாள் உடன் தோன்றியிருக்கிறார் தனுஷ். இந்த அறிவிப்பை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.