“பற்ற வைத்த பரட்டை” அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் – வீடியோ

பரட்டை பற்ற வைத்ததால் எரிந்து கொண்டிருக்கிறது என ரஜினிகாந்த் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

துக்ளக் பத்திரிகை விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்து, பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், அதனை தவிர்த்திருக்கலாம் எனவும், பரட்டை பற்ற வைத்துவிட்டார் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் அடித்துள்ளார்.

சென்னை, கலைவாணர் அரங்கில், துக்ளக் பொன் விழா ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அப்போது அவர் முரசொலி வைத்திருந்தால் அவர் திமுககாரன் என்றும் துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்றும் கூறி விமர்சனத்திற்குள்ளானார்.

மேலும், ஈ.வெ.ராமசாமி குறித்து, அவர் தெரிவித்த கருத்துக்கு பலரும் ஆட்சேபனை தெரிவித்தனர். ‘ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும், அவர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சில கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

இந்நிலையில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் சர்ச்சை கருத்தை பேசாமல் தவிர்த்திருக்க வேண்டும். பரட்டை பற்ற வைத்தது தமிழகம் முழுவதும் எரிந்து கொண்டிருக்கிறது. மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் அரசு அனுமதிக்காது. மாநில அரசின் அனுமதியின்றி எந்த திட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வரமுடியாது. இவ்வாறு ஜெயக்குமார் பேசினார்.Comments are closed.

https://newstamil.in/