நான் பா.ஜ.கவின் கைப்பாவை இல்லை; டில்லி வன்முறை – மத்திய அரசை கண்டிக்கிறேன் : ரஜினி

டெல்லியில் ஏற்பட்ட வன்முறை மத்திய அரசு உளவுத்துறையின் தோல்வியைக் காட்டுகிறது, வன்முறையை கட்டுப்படுத்தாத மத்திய அரசைக் கண்டிக்கிறேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த். அவர் பேசுயைில், சிஏஏ., சட்டத்தால் முஸ்லீம்கள் பாதிக்கப்பட்டால் தான் முதல் ஆளாக நானே இறங்கி போராடுவேன் என்று கூறியிருந்தேன்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் வந்த சமயத்தில் டில்லியில் ஏற்பட்ட வன்முறை கண்டிக்கத்தக்கது. இது உளவுத்துறையின் தோல்வியை காண்பிக்கிறது. இதற்காக மத்திய அரசை கண்டிக்கிறேன்.

இனியாவது அவர்கள் எச்சரிக்கையாக இருப்பார்கள் என நினைக்கிறேன். மதத்தை வைத்து சிலர் அரசியல் செய்வது கண்டிக்கத்தக்கது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுவார்கள் என்ற நம்பிக்கை இல்லை. அதனை நான் சொன்னால், நான் பா.ஜ.கவோடு இணைத்து பேசுகிறார்கள்.

பா.ஜ.கவின் ஊதுகுழல் என்று என்னைக் கூறுவது எனக்கு வேதனை தருகிறது. வன்முறைச் சம்பவங்களை மத்திய, மாநில அரசுகள் தொடக்கத்திலேயே இதனை களைய வேண்டும்’ என்று தெரிவித்தார்



Comments are closed.

https://newstamil.in/