ரஜினிக்கு சபாஷ் டுவீட்; கமல் கூட்டணி வியூகம்!
டெல்லி வன்முறை தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்துக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று பேட்டி அளித்த ரஜினி, உள்துறை அமைச்சகத்தின் தோல்வியே டில்லி வன்முறைக்கு காரணம் என, மத்திய அரசைக் கண்டித்தார். இதை, மக்கள் நீதிமைய தலைவர், நடிகர் கமல் வரவேற்றுள்ளார்.

அவரது பதிவு, சபாஷ் நண்பர் ரஜினிகாந்த் அவர்களே, அப்படி வாங்க, இந்த வழி நல்ல வழி. தனி வழி அல்ல, ஒரு இனமே நடக்கும் ராஜபாட்டை வருக வாழ்த்துகள் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரவேற்றுள்ளார். ரஜினியுடன் கூட்டணிக்கு அச்சாரம் போடுவதாக உள்ளது, என்று ஒருபுறம் விமர்சனமும் எழுகிறது.