ஜன.,15 முதல் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’!
நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை வரும் ஜனவரி 15ஆம் தேதி முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பொருந்தும் வகையிலான பொதுவான ரேஷன் அட்டைகளை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
பயனாளர்கள் தங்களுக்குரிய உணவுப்பொருட்களை இந்தியா முழுவதும் உள்ள எந்தவொரு நியாயவிலை கடையிலும் ரேஷன் கார்டு மூலம் வாங்கி கொள்ளும் முறையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
அதே வடிவமைப்பு முறையை பின்பற்றி புதிய ரேசன் கார்டுகளை மக்களுக்கு வழங்க வலியுறுத்தியுள்ளது. முதல்கட்டமாக முன்னோட்ட அடிப்படையில் 12 மாநிலங்களில், இந்த திட்டத்தை 2020 ஜன,15 முதல் இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
முதல்கட்டமாக ஆந்திரா, தெலங்கானா, குஜராத், ஹரியானா, ராஜஸ்தான், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்களில் வரும் ஜனவரி 15ம் தேதி அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
Comments are closed.