நித்தியானந்தா அடுத்த அதிரடி – புதிய வீடியோவால் சர்ச்சை!

நித்தியானந்தா கைலாசத்தை கட்டி அமைக்கும் பணிகள் முடிவடைந்ததாகவும், இனி தனக்கும் தமிழகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் என்னுடைய உடலை கர்நாடகாவில் உள்ள பிடதி ஆசிரமத்தில் தான் அடக்கம் செய்ய வேண்டும். நான் மரணம் அடைந்துவிட்டால் என்னுடைய சொத்துக்கள் யாருக்கு செல்ல வேண்டும் என்று உயில் எழுதி வைத்து விட்டேன்.

தேடப்படும் குற்றவாளி சாமியார் நித்யானந்தா வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் பல்வேறு விஷயங்களை தெரிவித்து பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.

நித்யானந்தாவை கர்நாடக போலீஸ் விடாமல் தேடிக் கொண்டிருக்கிறது. பல்வேறு நீதிமன்றங்கள் விசாரணைக்காக காத்துக் கிடக்கின்றன. இவற்றுக்கெல்லாம் சளைக்காமல் வெளிநாட்டில் எங்கோ ஓர் இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சமீபத்தில் நித்தியானந்தா வெளியிட்ட வீடியோவில் அவர் பேசியதாவது: தேவையில்லாமல் எதிரிகள், எதிர்ப்புகள் என நேரத்தை வீணடிப்பதை தவிர்க்க நான் என்னுடைய செயலை செய்து கொண்டிருக்கிறேன்.

நான் உருவாக்கி கொண்டிருக்கும் கைலாசா, உலகிற்கே பெரும் பங்களிப்பாக இருக்கும். கைலாசத்தை கட்டி அமைக்கும் பணிகள் முடிவடைந்து விட்டன. இனி, எனக்கும் தமிழகத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. என் வாழ்நாள் முழுவதும் தமிழில் பேசுவேனே தவிர வேறு எந்த சம்பந்தமும் இல்லை.

நான் புலம் பெயர்ந்த தமிழன் என பெருமையாக சொல்வேன். அவர்கள் ஓடிப்போன நித்தி என சொல்வார்கள். தமிழக ஊடகத்தை பொறுத்தவரை நான் இறந்துவிட்ட மனிதனை போன்றவன். இனி நான் தமிழகத்திற்கு வரப்போவது இல்லை, உலகின் ஏதோ ஒரு மூலையில் இருக்க போகிறேன்.

நான் இறந்தபிறகு கர்நாடக ஆசிரமத்தில் உள்ள தியான பீடத்தில் தான் என் உடல் அடக்கம் செய்ய வேண்டும் என எழுதி வைத்துவிட்டேன். சொத்து முழுவதும், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், மதுரை ஊர்களில் உள்ள குரு பரம்பரைக்கு எழுதி வைத்து விட்டேன். இவ்வாறு அவர் பேசினார்.


1,255 thoughts on “நித்தியானந்தா அடுத்த அதிரடி – புதிய வீடியோவால் சர்ச்சை!