ஆஸ்திரேலிய ஓபன் – செர்பியாவின் ஜோகோவிச் சாம்பியன்
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் ஃபைனலில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், ஆஸ்திரியாவின் டாமினிக் தியம்மை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று சாதித்தார்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடப்பு ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் ‘நம்பர்-2’ செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 5வது இடத்தில் உள்ள ஆஸ்திரியாவின் டொமினிக் தியம் மோதினர்.
நான்கு மணி நேரம் நீடித்த போட்டியில் அசத்திய ‘நடப்பு சாம்பியன்’ ஜோகோவிச் 6-4, 4-6, 2-6, 6-3, 6-4 என்ற கணக்கில் வெற்றி முன்னதாக ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் கடந்த 2008, 2011, 2012, 2013, 2015, 2016, 2019 என ஜோகோவிச் 7 முறை சாம்பியன் பட்டம் வெற்றிருந்தார். தவிர இது, இவரது 17வது கிராண்ட்ஸ்லாம் பட்டம்.