ஜுவாலா கட்டாவுடன் விஷ்ணு விஷால் காதலா?
நடிகர் விஷ்ணு விஷால் தனக்கு விவாகரத்து ஆன பின்னர், பிரபல பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவை காதலிப்பதாக செய்திகள் பரவின.
இந்நிலையில் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா காதலர் தினத்தன்று விஷ்ணுவிஷாலுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், விஷ்ணு விஷாலுக்கு முத்தமிடும் புகைப்படத்தை பதிவிட்ட ஜுவாலா கட்டா, என்னுடைய காதலர் என்று காதல் எமோஜியுடன் ட்வீட் செய்துள்ளார்.
ஜுவாலா கட்டாவின் இந்த ட்வீட்டுக்கு சத்தமிட வேண்டாம் என்பதைக் குறிப்பிடடும் எமோஜியை பதிவிட்டுள்ளார் விஷ்ணு விஷால்.
Comments are closed.