உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு – பாஜக எம்எல்ஏ குற்றவாளி

உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கில் முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் சேன்கார் குற்றவாளி என டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உன்னாவ் என்ற இடத்தில் இளம்பெண் ஒருவர், 2017 ம் ஆண்டு பாங்கர்மாவ் தொகுதி பா.ஜ., எம்எல்ஏ., குல்தீப்சிங் செங்கார் தன்னை கடத்திச் சென்று, பலாத்காரம் செய்ததாக புகார் கூறினார். இந்த புகாரின் மீது வழக்குப்பதிவு செய்யாமல் போலீசார் இழுத்தடித்து வந்தனர்.

புகாரை திரும்பப் பெறுமாறு போலீசார் தாக்கியதில் இளம்பெண்ணின் தந்தை, போலீஸ் ஸ்டேஷனில் மரணமடைந்தார். இதனை அடுத்து, இவ்விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்த பின்னர் ஒருவழியாக நடவடிக்கையில் இறங்கினர். லக்னோ நீதிமன்றத்தில் இந்த பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது.

இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து உச்ச நீதிமன்றமே நேரடியாக கண்காணித்து இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதன்படி உன்னாவ் பலாத்கார வழக்கு, விபத்து வழக்கு உள்பட 5 வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்பட்டது.

பா.ஜ., எம்எல்ஏ., தன்னை மிரட்டுவதாக முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கும் அப்பெண் கடிதம் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து குல்தீப்சிங் மீண்டும் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக, குல்தீப் சிங் செங்கார், அவரது சகோதரர் மற்றும் 9 பேர் மீது தனியாக கொலை உள்ளிட்ட குற்றப்பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டில்லி ஐகோர்ட்டில் நடைபெற்ற விசாரணை முடிவுக்கு வந்தது.

இதனை அடுத்து இந்த வழக்கில் இன்று நீதிபதி தீர்ப்பளித்தார். போக்சோ வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிபதி தீர்ப்பளித்தார். அவருக்கான தண்டனை விபரங்கள் வரும் 19-ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி கூறினார்.



Comments are closed.

https://newstamil.in/