இந்தியன் 2 விபத்து – மூவர் உயிரிழப்புக்கு கமல் ரூ.1 கோடி நிதி

தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் நடந்து வந்த ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கிரேன் விழுந்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து உதவி இயக்குனர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 10பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. இறந்தவர்களுக்கு கமல் இரங்கல் தெரிவித்ததோடு, அடிப்பட்டு மருத்துவமனையில் இருந்தவர்களை நேரில் சென்று நலம் விசாரித்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் இங்கு லைகா நிறுவனம் சார்பிலோ, ராஜ் கமல் நிறுவனம் சார்பிலோ அல்லது வேறு எந்த நிறுவனம் சார்பிலோ வரவில்லை. நான் சிறுவயதில் இருந்தே சினிமாவில் வளர்ந்தேன். இது என் குடும்பம். எனது குடும்பத்தில் இந்த மூன்று பேரும் மரணம் அடைந்திருப்பது வருத்தமளிக்கிறது.

இனி போன்ற விபதுக்கள் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒட்டுமொத்த துறையும் இதில் பங்கேற்க வேண்டும். இதை வேண்டுகோளாக யாரும் நினைக்க வேண்டாம், இது நமது கடமை.

விபத்துக்கு ஏழை, பணக்காரன் என்றெல்லாம் தெரியாது. சுனாமி மாதிரி வந்து போய் விடும். இந்த அறைக்குள்(பிணவறை) நானும் இருக்க கூடும். நூழிலையில் உயிர் தப்பினேன்.

4 நொடிகளுக்கு முன்பு வரை அங்கு தான் இருந்தேன். ரூ.100 கோடி, ரூ.200 கோடி என மார் தட்டிக் கொள்ளும் நாம், கடைநிலை ஊழியனுக்கு கூட பாதுகாப்பு தர முடியவில்லை.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் அளிக்கிறேன். இது நடந்த விபத்திற்கு பரிகாரம் அல்ல. இறந்தவர்களின் குடும்பத்திற்கு செய்யும் ஒரு சிறு முதலுதவி. ஆனால், இது இறப்பிற்கு சிகிச்சை அல்ல. சிகிச்சையை சினிமாத்துறையினர் இணைந்து செய்ய வேண்டும். இனிமேல் ஒரு கடைநிலை ஊழியரும் இறக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதை எனது கோரிக்கையாக தெரிவித்துக்கொள்கிறேன்



Comments are closed.

https://newstamil.in/