பீஜிங்: சீனாவில் தொடங்கி தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ். உலக அளவில் கொரோனா வைரசிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 904 ஆக அதிகரித்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது. மேலும் 40,000 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சீனாவில் அதிகபட்சமாக ஹூபி பகுதியில் மட்டும் கொரோனா வைரசிற்கு இதுவரை 871 பேர் பலியாகி உள்ளனர். டிசம்பர் இறுதி முதல் இதுவரை 28 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது.
கொரோனா வைரசிற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாததால் பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தற்போது, கொரோனா வைரஸால் 25 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.