அ.தி.மு.க., கூட்டணியில், பாஜக-வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில், பாஜகவுக்கு தமிழ்நாட்டில் 20 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க., – பா.ஜ., இடையே, தொகுதி பங்கீடு பேச்சு நடந்து வந்த நிலையில், பா.ஜ.,வுக்கு 20 தொகுதிகளை, அதிமுக ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள கன்னியாகுமரி லோக்சபா தொகுதியும் பா.ஜ.,வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அ.தி.மு.க., கூட்டணியில், பா.ம.க.,வுக்கு, 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அடுத்து, பா.ஜ.,வுடன் பேச்சு துவங்கியது. உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்த போது, நட்சத்திர ஓட்டலில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது, பா.ஜ., தரப்பில், 40 தொகுதிகள் கேட்கப்பட்டுள்ளது; அ.தி.மு.க., தரப்பில், 18 தொகுதிகள் தருவதாக கூறப்பட்டு, பின், 20 ஆக உயர்த்தி உள்ளனர். தொடர்ந்து தொகுதி பங்கீடில் இழுபறி நீடித்து வந்தது.
Comments are closed.