நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை சம்மன்

நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பு நடைபெறும் தளத்தில் நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை நேரில் சம்மன் வழங்கியுள்ளது.

‛பிகில்’ படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ். நிறுவனத்திகு சொந்தமான இடங்களில் இன்று(பிப்., 5) காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

விஜய் நடிக்கும் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை, நெய்வேலி என்எல்சி 2வது சுரங்கப் பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது

இதுதொடர்பாக விஜய்யையும் விசாரிக்க வேண்டும் என கூறி உதவி கமிஷனர் கிருஷ்ணகாந்த் தலைமையிலான அதிகாரிகள், மாஸ்டர் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தனர்.

இதில் நடிகர் விஜய்யை தனியாக அழைத்துச் சென்று விசாரித்ததாகவும், மேலும் அவருடன் நடித்த மற்ற 4 நபர்களிடம் விசாரணையும் செய்து வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



Comments are closed.

https://newstamil.in/