ஆஸி, இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு – முழு வீரர்கள் லிஸ்ட்!

ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிரான டி20 தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா பங்கேற்க உள்ளது.

பும்ரா மீண்டும் அணிக்கு திரும்புகிறார். அதே சமயம் முகமது ஷமிக்கு ஓய்வு அளித்து அணியில் இடம் அளிக்கவில்லை.

ஒரு நாள் தொடர்
ஒருநாள் தொடருக்கான இந்திய அணி ஆஸ்திரேலிய ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணி – விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவான், ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), கேதார் ஜாதவ், சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், சாஹல், பும்ரா, நவ்தீப் சைனி, ஷர்துல் தாக்குர்

டி-20 தொடர்
இலங்கை டி20 தொடருக்கான இந்திய அணி – விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், பும்ரா, நவ்தீப் சைனி, ஷர்துல் தாக்குர், மனிஷ் பாண்டே, வாஷிங்க்டன் சுந்தர், சஞ்சு சாம்சன்

இந்தியா – இலங்கை அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் போட்டிகள் ஜனவரி 5, 7 மற்றும் 9 தேதிகளில் நடைபெற உள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் போட்டிகள் ஜனவரி 14, 17, மற்றும் 19 தேதிகளில் நடைபெற உள்ளது.



Comments are closed.

https://newstamil.in/