பிரதமர் தவறான தகவல்கள் அளிப்பது ராஜதந்திரம் ஆகாது – மன்மோகன் சிங்

SHARE THIS
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

லடாக்கில் சீன வீரர்கள் தாக்கியதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்ததற்கு நீதி கிடைக்க வேண்டும். இதற்காக நடவடிக்கை எடுக்காவிட்டால், அது வரலாற்று பிழை ஆகிவிடும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தோ- சீனா எல்லை கல்வான் பள்ளத்தாக்கில், இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்ததை அடுத்து, பிரதமர் மோடி அனைத்துக்கட்சிக் கூட்டத்தை நடத்தினார். இதில், சீனா நமது எல்லைக்குள் ஊடுருவவில்லை எனவும், நமது நிலைகளைக் கைப்பற்றவில்லை என்றும் பிரதமர் குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் கல்வான் சர்ச்சை தொடர்பாக அறிக்கை விடுத்துள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரதமர் தான் பேசும் ஒவ்வொரு வார்த்தையின் தாக்கத்தையும் நினைவில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

ஏப்ரல் மாதத்தில் இருந்தே நமது எல்லைகளை சீனா அத்துமீறி ஆக்கிரமிக்க முயல்வதாக குறிப்பிட்டுள்ள மன்மோகன் சிங், இதனை நாம் அனுமதிக்கவே முடியாது எனவும் கூறியுள்ளார்.

வெளியில் இருந்து வரும் அச்சுறத்தலை தைரியமாக எதிர்க்க வேண்டும். ராணுவ வீரர்களின் தியாகத்திற்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்காவிடில், அது வரலாற்று துரோகம் ஆகிவிடும். இவ்வாறு அந்த அறிக்கையின் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.


Tag: , , , , , , , , , , ,

One thought on “பிரதமர் தவறான தகவல்கள் அளிப்பது ராஜதந்திரம் ஆகாது – மன்மோகன் சிங்

 • August 10, 2020 at 7:22 am
  Permalink

  Uno puede aprender algo nuevo aquí todos los días. Estoy un habitual para la mayoría de los blogs, pero aún no sabía nada de un par de ellos. Harlene Lyon Trude

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *