சூரிய கிரகணம் ஜூன் 21 ல் நிகழ்கிறது. பூமி தன் சுற்றுப்பாதையில் சூரியனையும், நிலவு தன் சுற்றுப்பாதையில் பூமியையும் சுற்றி வருகின்றன.
இந்நிகழ்வில் சூரியன், பூமி, நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது, சூரியனுக்கும் – பூமிக்கும் இடையில் நிலவு இருக்கும்.
அப்போது சூரிய ஒளியை நிலவு மறைப்பதால், அதன் நிழல் பூமியில் தெரியும். இது சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. இது காலை 10: 22 முதல் பகல் 1:32 மணி வரை நீடிக்கிறது.
நிகழப்போகும் சூரிய கிரகணத்தில் மிகப்பெரிய அழிவு ஒன்றை உலகம் சந்திக்கும் என்று பிரபல ஜோதிடர் ஒருவர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்திலுள்ள மிகப்பெரிய ஜோதிடர்களில் ஒருவர் பாலாஜி ஹாசன். பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பேட்டிகளில் தன்னுடைய கணிப்புகளை எந்தவித தயக்கமும் இன்றி தன்னுடைய கணிப்புகளை வெளிப்படையாக பேசும் ஆற்றல் கொண்டவர்.
இதனால் இளம் வயதிலேயே இவர் மிகவும் பிரபலம் அடைந்துள்ளார். சென்ற ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை முடிவுகளும் இவர் கூறியவாறே அமைந்திருந்தன.
இந்த சூரிய கிரகணத்தின் போது மிகப்பெரிய அழிவை உலகம் சந்திக்கும் என்று இவர் கூறியிருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது “ஜோதிடத்தின்படி சூரியனை குறிக்கும் கிரகமானது அரசன், அரசியல்வாதி, உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள், கலைத்துறையில் பிரபலமானோர் ஆகியோருக்கு ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கும்.