சனிக்கிழமை, செப்டம்பர் 19, 2026
Latest

அடுத்து 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு – மோடி

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். குறைந்தபட்சம் இந்த ஊரடங்கு அடுத்த 21 நாள்களுக்கு அமலில் இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

கொரோனோவை தடுக்க, சமூகத்தில் இருந்து விலகி, தனியே இருப்பது அவசியம்.மக்களிடம், இது பற்றிய விழிப்புணர்வை, பத்திரிகைகள் ஏற்படுத்த வேண்டும். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க, மாநிலங்கள் எடுத்துள்ள முடிவை, வாசகர்களிடம் தெரிவிக்க வேண்டும்.