DMK Candidate list – திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
173 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். இதில், கொளத்தூரில் 3வது முறையாக ஸ்டாலினும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதியும் போட்டியிடுகின்றனர்.
இன்று வெளியான பட்டியலில் திமுக முன்னாள் அமைச்சர்கள் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. மேலும் சில தொகுதிகளில் ஏற்கனவே போட்டியிட்ட நபர்களே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. இந்நிலையில், மார்ச் 15 ஆம் தேதி மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்.
அதே நாளில் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்ய இருக்கிறார் ஸ்டாலின்.
Comments are closed.