டெல்லி, கர்நாடகா முழுவதும்,’ஹை அலர்ட்’; 6 பேருக்கு கொரானா பாதிப்பு?

கொரோனா‘ வைரசால், எச்சரிக்கையடைந்துள்ள கர்நாடக அரசு, இந்த வைரஸ் பரவாமல் தடுக்க, மாநிலம் முழுவதும், ‘ஹை அலர்ட்’ அறிவித்துள்ளது.

சீனாவில் உருவான கொரோனாவைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், மத்திய அரசு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

கொரோனா வைரசால் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 6 பேருக்கு பாதிப்பு உள்ளதா என பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியில் 5 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய வைரஸ் பரவாமல் தடுக்க, மாவட்டம், தாலுகா, பேரூராட்சி மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.தினமும் 24 மணி நேரம் பணியாற்றும்படி, டாக்டர்களுக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

டெல்லி, ஐதராபாத், ராஜஸ்தானில் தலா ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இத்தாலி நாட்டுப் பயணி ஒருவரின் மனைவிக்கு வைரஸ் தாக்கியிருப்பது தெரிய வந்ததை அடுத்து ஜெய்ப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

லேசான காய்ச்சல், இருமல் இருந்தால் அலட்சியப்படுத்தாமல், மருத்துவமனைகளுக்கு சென்று பரிசோதிக்கும்படி, பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. சிறிய அளவில் காய்ச்சல், இருமல் உள்ளவர்கள் மாஸ்க்பயன்படுத்துங்கள். குறிப்பாக, ‘என் 95’ ரக மாஸ்க்குகளை பயன்படுத்த வேண்டும்.

திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டால் பயப்படாதீர்கள். சரியாக வேக வைத்து, தயாரித்த உணவை சாப்பிட வேண்டும். அவ்வப்போது பயன்படுத்தும் பொருட்களை சுத்தம் செய்த பின் பயன்படுத்துங்கள்.நோயின் குறிகுறிகள்சிறிய அளவில் காய்ச்சல், இருமல், மூச்சுப்பிரச்னை, தலைவலி, வயிற்றுப்போக்கு.

இந்நிலையில் நொய்டாவை தலைமையிடமாகக் கொண்ட பள்ளி உள்ளிட்ட 5 பள்ளிகளுக்கு இந்த வாரம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


82 thoughts on “டெல்லி, கர்நாடகா முழுவதும்,’ஹை அலர்ட்’; 6 பேருக்கு கொரானா பாதிப்பு?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/