அச்சுறுத்தும் டெங்கு காய்ச்சல்: சென்னையில் 11 பேர் பாதிப்பு

SHARE THIS
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சென்னையில் கடந்த 1-ம் தேதி முதல் இதுவரை 11 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. தேனாம்பேட்டை, வளசரவாக்கம், அடையாறு மண்டலங்களில் 3 பேர், கோடம்பாக்கம் 2 பேர் என 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொசு ஒழிப்புப் பணிகளில் 1,262 நிரந்தர பணியாளர்களும் 2,359 ஒப்பந்தப் பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்றின் கோரத் தாண்டவம் மெல்ல ஓய்ந்து வருவது போல இருக்கும் நிலையில், டெங்கு காய்ச்சலால் பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தியில்,

சென்னையில் கடந்த 13 நாள்களில் 11 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மேலும், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.


Tag: , , ,

0 thoughts on “அச்சுறுத்தும் டெங்கு காய்ச்சல்: சென்னையில் 11 பேர் பாதிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *