மது போதையில் வாகனம் ஓட்டினால் கைது- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்ய வேண்டும், மேலும் அவர்களது ஓட்டுவோரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் – மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்வதுடன், அவர்களின் லைசென்சை ரத்து செய்ய வேண்டும். மதுபோதையில் வாகனம் ஓட்டுவதை கண்காணிக்க, போலீசார் தனிப்பிரிவை ஏற்படுத்த வேண்டும். கைது செய்யப்படுபவர்கள் குறித்த அறிக்கையை மாதந்தோறும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Comments are closed.