நித்தியானந்தாவுக்கு எதிராக இன்டர்போல் ப்ளூ கார்னர் நோட்டீஸ்!

சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என்பதை தெரிவிப்பதற்கான ப்ளூ கார்னர் நோட்டீஸை வெளியிட்டுள்ளது இண்டர்போல் அமைப்பு, புளூகார்னர் நோட்டீஸ் என்பது குற்றவாளி இருக்கும் இடத்தை உறுப்பு நாடுகள் பகிர்ந்து கொள்வது கட்டாயமாகிறது என்பதை குறிக்கும்.

நித்யானந்தா மீது , கர்நாடகா மற்றும் குஜராத் மாநிலங்களில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. கர்நாடகாவில் நடைபெற்று வரும் பலாத்கார வழக்கில் ஆஜராகாமல் வாய்தா வாங்கினார் நித்தியானந்தா.

தொடர்ந்து அவர் தலைமறைவாக, அவரது பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டது. 2018 ல் முடிவடைந்த பாஸ்போர்ட்டை புதுப்பிக்க நித்யானந்தா அளித்திருந்த விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டது.

ஈக்வடார் நாட்டில் நித்யானந்தா தஞ்சடைந்ததாக தகவல் வெளியானது. ஆனால், இதனை அந்நாடு மறுத்துவிட்டது. தென் அமெரிக்க பகுதிகளில் எந்த தீவையும் அவர் வாங்க உதவி செய்யவில்லை என விளக்கமளித்தது. ஈக்வடார் அருகேயுள்ள ஒரு தீவை வாங்கி கைலாசா என பெயரிட்டு சொற்பொழிவாற்றி வருவதாக தகவல்கள் வந்தன.

அத்துடன் நித்தியானந்தாவின் ஆசிரமும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. மேலும் அகமதாபாத் நீதிமன்றத்தில் நித்தியானந்தாவுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

கடத்தல் மற்றும் சிறுமிகளை அடைத்து வைத்து சித்ரவதை செய்தல் போன்ற குற்றங்கள் தொடர்பாக நித்யானந்தாவை கண்டுபிடித்து தரும்படியும், இதற்காக அவருக்கு எதிராக புளூகார்னர் நோட்டீஸ் வழங்கும்படியும் சர்வதேச புலனாய்வு அமைப்பான இன்டர்போலுக்கு குஜராத் போலீசார் கடிதம் எழுதினர்.

இதனை ஏற்று கொண்ட நித்தியானந்தாவுக்கு எதிராக புளூகார்னர் நோட்டீஸ் அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.



Comments are closed.

https://newstamil.in/