11 எம்.எல்.ஏ.க்கள் உட்பட 3 அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றால், எதிர்கட்சி மற்றும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் என அரசியல்வாதிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பரமக்குடி தொகுதி சதன் பிரபாகர், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பழனி, உளுந்தூர்பேட்டை குமரகுரு, கோவை தெற்கு தொகுதி அம்மன் அர்ச்சுனன் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அமைச்சர்களில் உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, மின் துறை அமைச்சர் தங்கமணி, அவரது மகன் தரணிதரன் ஆகியோருக்கு, நோய் தொற்று உறுதியானது.
இருவரும் சிகிச்சைக்காக, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சமீபத்தில் ராஜூவின் மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.