வெள்ளிக்கிழமை, அக்டோபர் 2, 2026
Latest

17 வயது சிறுவனின் அதிவேக பைக் பயணம்; நண்பனின் சோக மரணம்

17 வயது சிறுவன் தனது 18 வயது நண்பனுடன் சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு பைக்கில் பயணம் மேற்கொண்டார். நெடுஞ்சாலையில், அவர்கள் அதிவேகமாக சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக், 2 லாரிகளுக்கிடையே சிக்கிக்கொண்டது.

இந்த விபத்தில் 18 வயது இளைஞர், மீட்கப்பட்டபோது வழியிலேயே உயிரிழந்தார். 17 வயது சிறுவன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இவர்களுக்கு வாகனம் கொடுத்த 25 வயது வினித் என்பவரை செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.