திருச்சியில் ஆபாச வீடியோ பதிவிறக்கம் 2 பேர் கைது

வியாபார நோக்கத்தில் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்தால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என்று கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ரவி தெரிவித்தார்.

இந்நிலையில் ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்து, விற்பனை செய்து வந்த 2 பேரை திருச்சி போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் தென்னூரை சேர்ந்த காதர் பாட்ஷா, விமான நிலையம் பகுதியை சேர்ந்த சேக் அப்துல்லா ஆகியோர் ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்து பென் டிரைவ் , டிவிடி.,க்களில் விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கோவையில் 2 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். தொடர்ச்சியாக போலீஸ் சூப்பிரண்டுகள், காவல்துறை தலைவர்களுக்கு பட்டியல் அனுப்பி வைத்து இருக்கிறோம். அதனை சரியாக விசாரித்து குற்றவாளிகளை கைது செய்கிறார்கள். இப்போது ஆபாச படங்கள், வீடியோக்களை பதிவிறக்கம் செய்யப்படுவது முற்றிலுமாக குறைந்துவிட்டது.

இதனையடுத்து திருச்சியில் சிக்கிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களுடன் இணைந்து ஆபாச வீடியோக்களை விற்பனை செய்து வந்த முகம்மது அஸ்ரப் மற்றும் ரியாஜூதீன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். தலைமறைவாக உள்ள இவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த டிசம்பர் மாதம் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பகிர்ந்த குற்றத்திற்காக திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ் ராஜ் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


355 thoughts on “திருச்சியில் ஆபாச வீடியோ பதிவிறக்கம் 2 பேர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/