ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கப்படும்; மே 18க்குப் பிறகு ஊரடங்கு: மோடி தகவல்

நாடு தழுவிய ஊரடங்கு காலம் நிறைவடைய இன்னும் 5 நாட்கள் உள்ள நிலையில், இன்று மீண்டும் பிரதமர் மோடி டி.வி. வாயிலாக நாட்டு மக்களிடம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

அதில் அவர், ‘இந்தியா தனது கொள்கைகளின் மூலம் உலகத்தை மாற்றியுள்ளது. யோகா என்பது உலகுக்கான இந்தியாவின் பரிசு. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் இந்தியாவின் முயற்சிகள் உலக நாடுகளால் பாராட்டப்படுகின்றன. அதன்மூலம், இந்தியாவின் திறமைகள் குறித்து நம்பிக்கை ஏற்படத் தொடங்கியுள்ளது. உலகம் உயிருடனும் மரணத்துடனும் போரிட்டுவருகிறது.

கொரோனா பாதிப்பு முக்கிய உற்பத்தி துறைகளை ஆட்டம் காண வைத்துள்ளது. மக்களின் உள்ளார்ந்த சக்தியை கொரோனா பாதிப்பு வெளிக்காட்டியிருக்கிறது.

இந்தியாவின் வளர்ச்சி 5 முக்கிய கட்டங்களை கொண்டது. அவை, பொருளாதாரம், உட்கட்டமைப்பு, உற்பத்தி தேவை, ஜனநயகம், நவீன தொழில்நுட்பம் ஆகிய 5 அம்சங்களும் அவசியம்.

பொருளாதாரத்தை மீட்டெடுக்க பொருளாதாரத் திட்டத்துக்காக ஆத்மா நிர்பார் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம் ஒதுக்கப்படும். அதன் மொத்த ஒதுக்கீடு 20 லட்சம் கோடி ரூபாய் வரை இருக்கும், என்று தெரிவித்தார்.

4-ம் கட்டமாக நாடு தழுவிய ஊரடங்கு குறித்து மே.18-ம் தேதிக்கு முன்பு அறிவிக்கப்படும். இது புதிய முறையில் இருக்கும்.



Comments are closed.

https://newstamil.in/