வெங்காயம் 1 கிலோ ரு.10 ரூபாய்தான்
வெளிநாட்டில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு சந்தைக்கு வரத்தொடங்கியுள்ளதால், வெங்காயத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள், அதனை சந்தைக்கு கொண்டு வரத் தொடங்கி உள்ளனர். இதனால் வெங்காயத்தின் விலை தற்போது குறையத் தொடங்கியுள்ளது.
மழையின் காரணமாக வட மாநிலங்களில் வெங்காயம் விளைச்சல் பாதியாக குறைந்து விட்டது. இதனால் கடந்த 4 மாதங்களில் வெங்காயம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த நவம்பர் முதல் வாரம் ஒரு கிலோ வெங்காயம் 60 ரூபாய்க்கு விற்பனையானது.
நவம்பர் 2-வது வாரம் 10 ரூபாய் உயர்ந்து கிலோ 70 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நவம்பர் கடைசியில் ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாயை தொட்டது. டிசம்பர் 2-ந்தேதி ரூ.110 ஆக உயர்ந்தது.
இந்நிலையில் எகிப்து மற்றும் ஆஸ்திலேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் விற்பனைக்கு வந்துள்ளன. இதையடுத்து வெங்காயத்தின் விலை கணிசமாக குறையத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் கடலூர் உழவர் சந்தையில் 5 கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதைக் கேள்விப்பட்ட பொது மக்கள் வெங்காயம் வாங்க கடலூர் உழவர் சந்தைக்கு படை எடுத்து வருகின்றன. போட்டி காரணமாக வெங்காயம் கிலோ ரு.10க்கு விற்கப்பட்டது. இதனை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அதிகளவில் மக்கள் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.