விரட்டி விரட்டி அடித்த இந்தியா – ரோஹித், ராகுல் சதம்; ஹாட்ரிக் விக்கெட் எடுத்த குல்தீப் யாதவ்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 387 ரன்கள் குவித்தது. 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று சமனில் உள்ளது.

இந்திய அணியின் சார்பில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா, லோகேஷ் ராகுல் மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சை அடித்து துவம்சம் செய்தனர்.

இருவரும் விக்கெட் இழப்பின்றி, 37 ஓவர்கள் வரை விளையாடி 227 ரன்கள் குவித்தனர். இருவரும் சதத்தைக் கடந்தனர். 104 பந்துகளில் 102 ரன்கள் குவித்திருந்திருந்தநிலையில், அல்சாரி ஜோசப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கோலி பொல்லார்ட் வீசிய முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து, ரோஹித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் நல்ல பாட்னர்ஷிப்பைக் கொடுத்தார். மறுபுறம் ரோஹித் சர்மா அடித்து துவைத்தார்.

அவர், 138 பந்துகளில் 17 பவுண்டர்களும், 5 சிக்ஸர்களுடன் 159 ரன்கள் குவித்திருந்த நிலையில் கோட்ரெல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மறுபுறம் அதிரடியாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் 53 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆட்டநேர இறுதியில், 5 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 387 ரன்கள் குவித்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக ஹோப் 78 ரன்களும், நிகோலஸ் பூரன் 75 ரன்களும் அடித்துள்ளனர்.
இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ், ஷமி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா 2 விக்கெட்டுகளையும், தாகூர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று சமனில் உள்ளது. 3-வது ஒரு நாள் போட்டி ஒடிஷாவில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.



Comments are closed.

https://newstamil.in/