ரஜினி 168ல் நயன்தாரா – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தர்பார் படத்தை அடுத்து ரஜினிகாந்தின் 168-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சிவா இயக்கும் இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.

இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இமான் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

குடும்ப சென்ட்டிமென்ட் கலந்து உருவாகும் இப்படத்தில் திடீர் இன்ப அதிர்ச்சியாக நயன்தாராவும் இணைந்திருக்கிறார். ஐதராபாத்தின் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது.

ஏற்கனவே ரஜினி உடன் சந்திரமுகி, குசேலன், தர்பார் படங்களில் நடித்த நயன்தாரா, மீண்டும் ரஜினி உடன் தொடர்ச்சியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இந்தப் படத்துக்கு ‘அண்ணாத்த’ என்று டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


1,582 thoughts on “ரஜினி 168ல் நயன்தாரா – அதிகாரப்பூர்வ அறிவிப்பு