செழியனை வீட்டை விட்டு அடித்து துரத்தும் பாக்கியலட்சுமி – சீரியலில் இன்று

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நவம்பர் 4ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.

இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், இனியா காய்ச்சலால் படுத்திருக்கிறார். அவளை பார்க்கும் பாட்டி ஈஸ்வரி, உடம்பு சரியில்லாத மகளை கூட பார்க்க டைம் இல்லையா என்று பாக்யாவை திட்டிக்கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் மாத்திரை போடாமல் இருந்தால் எப்படி காய்ச்சல் குறையும் என்று சொல்லிக்கொண்டே மாத்திரைய கொடுக்கிறாள்.

Baakiyalakshmi Serial Today Episode

அந்த நேரத்தில் கோவிலில் இருந்து வீட்டுக்கு வரும் பாக்யாவை பார்த்து உனக்கு குழந்தை மீது அக்கரையே இல்லையா என்று கேட்கிறார் ஈஸ்வரி். இதை கேட்டு எப்போதும்போல் மாமியாரை சமாதானம் செய்யும், பாக்யா, செழியனை அழைத்து உன்னிடம் கொஞ்சம் தனியா பேசனும் வா என்று அழைத்து செல்கிறார். இதை கேட்டு ஈஸ்வரி என்ன பிரச்சனை என்று விசாரிக்க, செழியனை மட்டும் கூட்டிக்கொண்டு போகிறார் பாக்யா.

தனியாக ரூமுக்கு அழைத்து வந்த செழியனிடம், இப்போ தான் மாலினியை பார்த்துவிட்டு வருகிறேன் என்று சொல்ல, செழியன் வழக்கம்போல் தனக்கு எதுவும் தெரியாது என்று மழுப்பலாக பதில் சொல்கிறான். இதனால் கோபமான பாக்யா போட்டோவை காட்டி அவனை அடிக்கிறார். அப்பாவுக்கு புள்ள தப்பாம பொறந்திருக்க, உனக்கு தெரியாமதான் இந்த போட்டோ எழுத்தாங்களா என்று கேட்கிறார் பாக்யா.

மேலும் இந்த விஷயத்தை ஜெனிக்கிட்ட சொல்லி மன்னிப்பு கேளு என்று பாக்யா சொல்ல, செழியன் அதிர்ச்சியாகிறார். அதன்பிறகு பாக்யா கிச்சனில் செல்வியுடன் பேசிக்கொண்டிருக்க, வீட்டுக்கு தேவையான பொருட்களுடன் வரும் ராதிகா பொருட்களை டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டிருக்கிறார். அதன்பிறகு நானும் சமைக்கனும், இடையில் கொஞ்சம் டைம் கொடுத்தால் எனக்கும் கோபிக்கும் சேர்த்து சமைத்துக்கொள்வேன் என்று சொல்கிறாள்.

அடுத்து செழியன் ஜெனியிடம் மாலினி குறித்த விஷயத்தை சொன்னால் என்னவாகும் என்று நினைத்துக்கொண்டே அவளிடம் சொல்ல முயற்சி செய்கிறான். அதன்பிறகு பாக்யா ஈஸ்வரிக்கு காபி கொடுக்க, ஈஸ்வரி தனக்கு வேண்டாம் என்று சொல்கிறார். கோபியும் ராதிகா இப்போதான் காபி கொடுத்ததாக சொல்கிறார். இப்படி பேசிக்கொண்டிருக்கும்போது மாலினி அதிரடியாக வீட்டிற்குள் நுழைகிறாள். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/