இந்த ஒரு விஷயம் தான் விஜயுடன் நடிக்க காரணம் – விஜய் சேதுபதி ஓபன் டாக்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் மாஸ்டர். இதில் விஜய்-விஜய் சேதுபதி இடம்பெற்ற போஸ்டரால் தற்போது மாஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

விஜய்சேதுபதி மாஸ்டர் படத்தில் ஜேம்ஸ் துரைராஜ் என்ற பாத்திரத்தில் விஜய்சேதுபதி நடித்து வருவதாக தகவல் கசிந்தது. விஜய் சேதுபதி அடுத்தடுத்து படங்கள் நடித்து கலக்கி வருகிறார்.

தன் படம் மட்டும் இல்லாமல் மற்ற பிரபலங்களின் படங்களிலும் முக்கிய வேடத்தில் நடிப்பது, சிறப்பு வேடத்தில் நடிப்பது என செய்து வருகிறார்.

அப்படி தான் அசோக் செல்வன் நடிப்பில் வரும் பிப்ரவரி 14ம் தேதி வெளியாகவுள்ள ஓ மை கடவுளே படத்தில் சின்ன வேடத்தில் நடித்திருக்கிறார்.

விஜய் சேதுபதியிடம், மாஸ்டரில் வில்லனாக நடிக்க ஏன் ஒப்புக் கொண்டீர்கள் என கேட்டுள்ளனர். அதற்கு அவர், வெறும் நடிகர் என்ற ஒற்றை பெயரோடு வலம் வர விரும்பவில்லை, பல மாற்றங்கள் இருக்க வேண்டும்.

மாஸ்டர் படத்தில் என்னுடைய வேடம் குறித்து சொன்ன விஷயம் பிடித்திருந்தது, அது நெகட்டீவ் ரோல் கிடைத்த வாய்ப்பை மிஸ் செய்ய விரும்பவில்லை என கூறியுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/