காமெடி நடிகர் அஸ்வின் ராஜா திருமணம்!

SHARE THIS
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

‘கும்கி’ படத்தில் காமெடி நடிகராக கலக்கிய நடிகர் அஸ்வின் ராஜா தனது காதலியை இன்று மணந்து கொண்டார். பொதுமுடக்கம் நடைமுறையில் உள்ள நேரத்தில் காமெடி நடிகர் அஸ்வின் ராஜாவின் திருமணம் நடைபெற்றுள்ளது.

‘கும்கி’, ‘பாஸ் (எ) பாஸ்கரன்’ போன்ற பல படங்களில் நடித்துள்ள நகைச்சுவை நடிகர் அஸ்வின் ராஜா. இவருக்கு இன்று திருமணம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில் வித்யாஸ்ரீயை மணந்துள்ளார்.

காமெடி நடிகர் அஸ்வின் ராஜா திருமணம்

மணமகன் அஸ்வின் மற்றும் வித்யாஸ்ரீ ஆகியோர் கடந்த 4 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் நன்கு அறிமுகி பழகிவந்துள்ளனர். அதன்பிறகு இவரது பெற்றோர் இறுதியாக ஒப்புக் கொண்டதால் இந்தத் திருமணத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.

ராஜசேகரின் மகள் வித்யாஸ்ரீ சென்னை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர். அவர் அமெரிக்காவில் முதுகலைப் படிப்பை முடித்திருந்தார்.

காமெடி நடிகர் அஸ்வின் ராஜா திருமணம்

பிரபலமான தயாரிப்பு நிறுவனமான லட்சுமி மூவி மேக்கரின் தயாரிப்பாளர் சுவாமிநாதனின் மகன்தான் இந்த அஸ்வின் ராஜா. இளம் நடிகரான இவர் கடந்த ஆண்டு வெளியான ஜோதிகாவின் ‘ஜாக்பாட்’ மற்றும் ஹரிஷ் கல்யாண் நடித்த ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

காமெடி நடிகர் அஸ்வின் ராஜா திருமணம்

நயன்தாரா, ஆர்யா, விக்ரம் பிரபு, சிவா என பல நடிகர்களுடன் நடித்துள்ள அஸ்வினின் திருமண செய்தி அறிந்த பிரபலங்கள் அவருக்கு போன் மூலமாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


LATEST FEATURES:

Tag: , , , , , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *