பாடங்களை கற்று கொடுத்த கொரோனா வைரஸ் தொற்று – பிரதமர் மோடி

கொரோனா வைரஸ் நெருக்கடி இந்தியாவை “தன்னிறைவு பெறவும், நம் அன்றாட வாழ்க்கையில் நமக்குத் தேவையான எதற்கும் மற்றவர்களைச் சார்ந்து இருக்கக் கூடாது” என்றும் கற்றுக் கொடுத்தது, பிரதமர் நரேந்திர மோடி இன்று கிராமத் தலைவர்களிடம் ஒரு வீடியோ மாநாட்டின் போது உரையாற்றினார்.

அதற்கு முன், பஞ்சாயத்து ராஜ் தினத்தில் இ-கிராம்சுவராஜ் என்ற வலைதளம் மற்றும் மொபைல் போன் அப்ளிகேசன் ஒன்று பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பஞ்சாயத்து ராஜ் மந்திரி நரேந்திர சிங் தோமரும் கலந்து கொண்டார்.

அதுமட்டுமின்றி, கிராமங்களில் பொது சேவை மையங்களின் எண்ணிக்கையும் 3 லட்சத்திற்கும் மேல் உள்ளது என கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நாம் சுய சார்புடன் இருக்க வேண்டும் என்ற படிப்பினையை கொரோனா வைரஸ் பாதிப்பு கற்று கொடுத்துள்ளது. நாட்டில் 1.25 லட்சம் பஞ்சாயத்துகளுக்கு பிராண்ட்பேண்ட் சேவை சென்றடைந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடுவதற்காக, சமூக இடைவெளி என்ற மந்திரத்தினை இந்தியாவில் உள்ள கிராமங்கள் எளிமையான முறையில் தந்துள்ளன என்றும் அவர் கூறினார்.



Comments are closed.

https://newstamil.in/