ரசிகர் மன்றங்களுக்கு பணம் அளித்த விஜய்! இந்த மனசு யாருக்கு வரும்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான நடிகர்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து திரைக்கு வர தயாராகவுள்ளது. நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம், இம்மாதம் வெளியாகவிருந்த நிலையில் கொரோன காரணத்தினால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தளபதி விஜய் கொரொனாவிற்காக ரூ 1.3 கோடி கொடுத்தது அனைவரும் அறிந்தது தான். அதை தாண்டியும் தளபதி தன் ரசிகர்களுக்கும் உதவி செய்துள்ளார்.

விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் ரசிகர்கள் தங்களது சொந்தப் பணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை அவர் அறிந்துள்ளார், அதனால் நடிகர் விஜய் மாவட்ட வாரியாக ரசிகர் மன்றங்களின் கணக்குகளில் பணம் செலுத்தி உள்ளார்.

ஆம், இந்த சமயத்தில் கஷ்டத்தில் இருக்கும் தன் ரசிகர்களுக்கு தளபதி தன் ரசிகர் மன்ற சார்பாக பணத்தை போட்டு விடுகிறாராம், இந்த செயல் எல்லோராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

சமீபத்தில் நடிகர் விஜய் பிரதமர் நிவாரண நிதிக்கு ₹ 25 லட்சம், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ₹ 50 லட்சம், திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்திற்கு ₹ 25 லட்சம், கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ₹ 10 லட்சம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு தலா ₹ 5 லட்சம் வழங்கினார்.


Comments are closed.

https://newstamil.in/