சூர்யாவின் அருவா பட தலைப்பு மாறுகிறதா?
சிங்கம் , சிங்கம் 2, சிங்கம்3 என்ற படங்களின் வெற்றிக்கு பிறகு ஹரியுடன் அருவா படத்தில் சூர்யா இணைவதால் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது. ஹரி இயக்கத்தில், சூர்யா நாயகனாக நடிக்க ‘அருவா‘ என்ற தலைப்பில் புதிய பட அறிவிப்பினை கடந்த வாரம் வெளியிட்டார்கள்.
ஹரி படம் என்றாலே அதில் கண்டிப்பாக அருவா காட்சிகள் இருக்கும். அதனாலேயே அவரை ‘அருவா ஹரி’ என்று கூட குறிப்பிடுவார்கள்.
இந்நிலையில் படத்துக்கு வைக்கப்பட்டுள்ள அருவா என்ற பெயர் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இந்த பெயர் பாடலாசிரியர் ஏகாதசி அருவா என்ற பெயரில் படம் ஒன்றை இயக்கி முடித்துள்ளார். ‘அருவா வேலு’ என்று ஒரு படம் வந்துள்ளது. ‘அருவா சண்ட’ என்று ஒரு படம் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. அப்படம் சில திரைப்பட விழாக்களிலும் கலந்து கொண்டுள்ளது.
இப்படி ‘அருவா’ தலைப்பைச் சுற்றி சில சர்ச்சைகள் வருவதால் படத்தின் தலைப்பை மாற்றலாமா என இயக்குனர் ஹரி குழுவினர் யோசனையில் உள்ளனர். விரைவில் அது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.
Comments are closed.