பிரதமர் மோடியை கலாய்த்த திருமுருகன் காந்தி!
கொரோனாவால், இந்தியாவில், 4,067 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 109 உயரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் வீடியோ ஒன்றை வெளியிட்ட பிரதமர் மோடி ஏப்ரல் 5 (நேற்று) இரவு 9 மணிக்கு மின்விளக்கை அணைத்துவிட்டு மெழுகுவர்த்தி, தீபம் ஏற்றும்படியும், டார்ச் லைட் அடிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி மற்றும் ஜிப்பாவில் தீபம் ஏற்றி மனம் உருக பிரதமர் நரேந்திர மோடி பிரார்த்தனை செய்தார், பல பிரபலங்களும் தாங்கள் தீபம் ஏற்றியதை இணையத்தில் பதிவிட்டனர். பல இடங்களில் சிலர் தீபங்களை ஏந்தி ஊர்வலமாக செல்வது போன்ற செயல்களிலும் ஈடுபட்டனர்.
மே17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி அதிருப்திகளை பதிவிட்டு உள்ளார் “ஆரிய இந்துத்துவ பார்ப்பனிய வேதமதம்’ என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த நம்பிக்கை குப்பைகள் எவ்வளவு ‘மூடத்தனமானது’, ‘பிற்போக்குத்தனமானது’, ‘மக்களை முட்டளாக்குவது’ என்பதை உலகிற்கே ‘விளக்கு’ போட்டு காண்பித்த பிரதமருக்கு நாம் ஏன் நன்றி சொல்லக்கூடாது?
பாசிட்டிவாக யோசிப்போமே!!!” என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
Comments are closed.