சிக்கலில் சிவகார்த்திகேயன் – அயலான் படம் நாளை வெளியாவதில் சிக்கல்

‘இன்று நேற்று நாளை’ பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாகப் பணிகள் நடந்து உருவாகியுள்ள படம் ‘அயலான்’. இப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்திருக்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாடல் ‘வேற லெவல் சகோ’ கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியானது.

இந்த நிலையில் இப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அயலான் படத்தை முதலில் தயாரித்த ஆர்.டி.ராஜாவின் கடன்களை தாம் கட்டிக்கொள்வதாக கூறி படத்தை தன் வசமாக்கினார் KJR ராஜேஷ். ஏற்கனவே படத்தின் மீது சுமார் ரூ.85 கோடி கடன் இருப்பதாகவும், அதை திருப்பி கொடுத்தால் மட்டுமே படத்தை வெளியிட அனுமதிப்போம் என பைனான்சியர்ஸ், விளம்பர நிறுவனத்தினர் உள்ளிட்டோர் கூறி வருகின்றனர்.

இதனிடையே, படத்தை வாங்கிய KJR ராஜேஷின் கடன்கள் சிலவும் அயலான் படத்தின் மீது சேர்ந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, தாங்கள் வழங்கியுள்ள பணத்தை திருப்பி தரும் வரை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று TSR Films நிறுவனம் உள்பட சிலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இடைக்கால தடை பெற்றுள்ளனர்.

இது தொடர்பாக புதன்கிழமை இரவு முழுவதும் பேச்சு வார்த்தை நடைபெற்றது. தயாரிப்பாளர்களின் கடனை சிவகார்த்திகேயன் ஏற்க வேண்டும் அல்லது உத்தரவாதம் அளிக்க வேண்டும் என பேச்சு வார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

அயலான் படத்திற்காக ஏற்கனவே சிவகார்த்திகேயன் சம்பளத்தை விட்டுகொடுத்த நிலையில், இந்த பிரச்னையை தீர்க்க ரூ.25 கோடியை அவர் தருவதாக கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

டாக்டர் படத்தின் வெளியீட்டின் போதும் இதே சிக்கல் ஏற்பட்டது. இறுதி நேரத்தில் தயாரிப்பாளர் KJR ராஜேஷ் 30 கோடி வழங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதை சிவகாத்திகேயன் ஏற்று கொண்டார். அதற்கு வாங்கிய கடனுக்காக டான் படத்தில் நடித்தார். தயாரிப்பாளர்களின் கடன்கள் சிவகார்த்திகேயன் மீது தொடர்ந்து சுமத்தப்பட்டு வருவதாக சினிமா துறையில் கூறப்படுகிறது.

ரூ.85 கோடி கடன் விவரம்

பைனான்ஸியர் அசோசியேசன் – ரூ.27 கோடி

சந்திரபிரகாஷ் ஜெயின் – ரூ.7 கோடி (நெகட்டிவ் ரைட்ஸ் 21 கோடி. அதில் மூன்று தவணையாக 7 கோடி)

TSRபிலிம்ஸ் – ரூ.10 கோடி

தங்கராஜ் – ரூ.5 கோடி

சேலஞ்ஸ் ஆட்ஸ் சக்திவேல்- ரூ.1.30 கோடி (TV Ad of சீமராஜா)

டீம் ஒன் சூசைராஜ் – ரூ.1 கோடி (Flex and Print of சீமராஜா)

மார்வெல் எண்டர்பிரைஸ் – ரூ.1 கோடி (Paper Ad Of சீமராஜா)

பதம்ஜந்த் – ரூ.6 கோடி

கரூர் ராதா – ரூ.3 கோடி

சத்தியஜோதி பிலிம்ஸ் விஸ்வம் GST & overflow – ரூ.3 கோடி

ரெட் ஜெயின் – ரூ.2.5 கோடி



Comments are closed.

https://newstamil.in/